கரும்பு தோட்டத்தில் தீ 9 ஏக்கர் நாசம்

திருத்தணி, மார்ச் 1: கரும்பு சோகைக்கு வைத்த தீ மளமளவென பரவி அருகே இருந்த 9 ஏக்கர் கரும்பு பயிர் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(50). விவசாயி. இவருக்கு சொந்தமான 13 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு பராமரித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பிரபாகரன் கரும்பை வெட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பினார்.

இந்நிலையில், நேற்று கரும்பு தோட்டத்தில் இருந்த சோகைக்கு தீ வைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக தீ மளமளவென பரவி அருகே உள்ள விவசாயிகள் வெங்கடேசன், அஞ்சுகோபி ஆகியோரது கரும்பு தோட்டத்தில் பரவியது. தகவலறிந்த திருத்தணி மற்றும் நகரி ஆகிய இடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 9  ஏக்கர் கரும்பு தீயில் கருகி சாம்பலானது.  இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>