×

மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை

திருவள்ளூர், மார்ச் 1: தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில, மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில்  உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்தவும், அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ேமலும், ஆந்திர எல்லையான திருத்தணி, பொன்பாடி சோதனைச்சாவடி, மாவட்ட எல்லைகளான திருமழிசை, நரசிங்கபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சோதனை சாவடியிலும், ஒரு எஸ்ஐ தலைமையில், 4 போலீசார், வருவாய் துறையினர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்யவும், அதை வீடியோ மூலம் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையே மதுபானங்களை கொண்டு செல்வது, ரவுடிகள் நடமாட்டம், குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்தும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

Tags :
× RELATED ரூ.97 ஆயிரம் பறிமுதல்