போக்சோவில் டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி, மார்ச்1: கும்மிடிப்பூண்டி அடுத்த பெட்டிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தன்ராஜ்(22). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி, கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தனிமையில் வசித்து வந்த தன்ராஜ், வீட்டின் அருகே வசித்து வரும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி, சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் இரவு தன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>