சொகுசு கார் திருட்டு

ஆவடி, மார்ச் 1: திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(44). கோடம்பாக்கத்தில் சுயமாக தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது சொகுசு காரில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் வீட்டு வாசலில் தெரு ஓரம் காரை நிறுத்திவைத்திருந்தார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது கார் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். காரை மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்பாபு, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவுசெய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம நபர்களை தேடுகின்றனர்.

Related Stories:

>