×

பைக் மோதி மூதாட்டி பலி

கறம்பக்குடி, மே 6: கறம்பக்குடி அருகே மங்காளாகோவில் கன்னுகுடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் (80). இவர் கடந்த 3ம் தேதி கறம்பக்குடி அருகே செவ்வாய் பட்டி செல்லும் சாலையில் உள்ள கடலை மில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக கறம்பக்குடியில் இருந்து திருவோணம் பகுதியை நோக்கி திருவோணம் காடு வெட்டு விடுதியை சேர்ந்த அசோக் (25) என்பவர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி முத்தம்மாள் கறம்பக்குடி க்கு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த அசோக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags : Karambakudi ,Muthammal ,Kannugudipatti ,Mangalakovil ,Chevvai Patti ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்