×

பொன்னமராவதி அருகே வயலில் இறந்து கிடந்த மான்

பொன்னமராவதி,மே 6: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் பூமிநாதர் கோயில் அருகில் சுசித்திராதேவி என்பவரின் வயல் அருகில் மான் ஒன்று இறந்து கிடப்பதாக பொதுமக்கள் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் வாயில் காயத்துடன் இறந்து கிடந்த 3 வயது மதிக்கத் தக்க ஆண் மானை மீட்டுச்சென்று கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்தனர்.

இறந்த மான் விபத்தில் அடிபட்டு இறந்ததா அல்லது காயம் ஏற்பட்டு இறந்ததா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் திரியும் மான்கள் தண்ணீருக்காக அலைந்து ஓடுவதால் இது போன்ற இறப்பு ஏற்படலாம். இதற்கு வனப்பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக ஏற்பாடுகளை செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Ponnamaravathi ,Revenue Department ,Forest Department ,Suchithradevi ,Sewalur Bhoominathar Temple ,Pudukkottai district ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்