காத்திருப்பு போராட்டத்தில் பரபரப்பு அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகி மயங்கி விழுந்தார் விஷப்பூச்சி கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

பொதுமக்கள் அவதி

திருச்சி, பிப். 26: முழு நேர அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கடந்த 22ம் தேதி முதல் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. சாலையிலேயே சாப்பிட்டு, இரவில் அங்கேயே படுத்து கொள்கின்றனர். நேற்று 4வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நீடித்தது. இதில் மாவட்ட தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்விக்கு நேற்றுமுன்தினம் இரவு விஷப்பூச்சி கடித்து கைகள் தடித்து வீங்கிய நிலையில் இருந்தார். இதனால் நேற்று அவர் சோர்வாக காணப்பட்டதால் சற்று ஓய்வாக சாலையோரம் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் தமிழ்செல்வி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாதுகாப்பிற்கு சாமியானா பந்தல் அமைக்க அனுமதி கோரியுள்ளனர்.

Related Stories:

>