மாற்றுத்திறனாளிகள் 35 பேர் கைது

திருச்சி, பிப்.26: திருச்சி தொழிலதிபர் வீரசக்தி மக்கள்நீதிமய்யம் கட்சியில் இணைந்தார். திருச்சியின் பிரபல தொழிலதிபர் வீரசக்தி. இவர் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியில் தொழில்முனைவோர் அணி மாநில செயலாளர் பொறுப்பும், அவருடன் சேர்ந்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட தொழில் அதிபர் கே.அய்யனாருக்கு, தொழில்முனைவோர் அணி மாநில துணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இருவருக்கும் கமல்ஹாசன் வாழ்த்து கூறினார். இந்நிகழ்ச்சியின்போது திருச்சி மாவட்ட செயலாளர் (நற்பணி) ஜானிபாஷா உடனிருந்தார்.

Related Stories:

>