மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது

மன்னார்குடி, பிப்.26: மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூக் கிட்டு இறந்த சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் தமிழ்வேந்தன்(28), சரண்யா(24). இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் கொரோனா முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் சரண்யாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா மன்னார்குடியில் உள்ள தனது தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து இறந்த சரண்யாவின் தந்தை ரவிச்சந்திரன் மன்னார்குடி காவல் நிலையத்தில் கணவர் தமிழ்வேந்தன், மாமியார் ஜக்கம்மா, அவரின் மகள் தமிழ்ச்செல்வி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய காரணத்தால் தன் மகள் இறந்துவிட்டதாகவும் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப் பிட்டிருந்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்தார். இந்நிலையில், மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன் உத்தரவின் பேரில், ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இறந்த சரண்யாவின் கணவர் தமிழ்வேந்தனை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து நீதிபதி உத்தரவின் பேரில் மன்னார்குடி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>