கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

முத்துப்பேட்டை, பிப்.26: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 11 பேர் கும்பகோணம் சுவாமிமலையில் நடந்த 8வது தென்னிந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு சான்றிதழ்கள், பரிசுகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் இப்பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, ஒன்றிய பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்திவிநாயகம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உத்திராபதி, கராத்தே பயிற்றுநர்கள் பூவேந்திரன், பிரதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகள் நிஷா, நித்திய, அபிநயா, தர்ஷினி, தரணி, காவியதர்ஷினி, புகழ்மதி, காவியா, தீபிகா, மதுமிதா, தர்ஷனா ஆகியோர் பாராட்டப்பட்டனர். முன்னதாக ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: