மருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு

முத்துப்பேட்டை, பிப்.26: முத்துப்பேட்டை பகுதியில் இன்று மருத்துவர் சமுதாய மக்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடும், சட்ட பாதுகாப்பும் வேண்டி, நூற்றுக்கும் மேற்பட்ட சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை முடி திருத்துவோர் நல சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ் கூறுகையில்: மருத்துவர் சமுதாய மக்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடும், சட்ட பாதுகாப்பும் வேண்டி தமிழ்நாடு முழுவதும் நாளை (இன்று 26ம் தேதி) அனைத்து சலூன் கடைகளும் அடைத்து போராட்டத்தில் ஈடுபடுகிறது. அந்த வகையில் முத்துப்பேட்டை நகரில் 25க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவைகள் அனைத்தும், அதேபோல் ஒன்றிய பகுதியில் உள்ள சலூன் கடைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரும் திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ள இருக்கிறோம் என்றார்.

Related Stories:

>