தஞ்சை பிப்.26: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஏஐடியூசி தொழிற் சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு ரூ.15 கூலி வழங்க வேண்டும். லாரி மாமூல் ஊழல் முறையை ஒழிக்க வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். 2012 முதல் தற்காலிகமாக பணிபுரியும் கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 26 வேலைநிறுத்தம் செய்ய அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.