கோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை

பாபநாசம், பிப்.26: பாபநாசத்திருந்து ஆவூர் செல்லும் சாலையில் கோபுராஜபுரம் கிராமம். கோபுராஜபுரம் செல்லும் சாலையில் வாய்க்காலை ஒட்டி சாலை இருப்பதால் சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை மேலும் அரிக்கப்படுமேயானால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலை அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>