மாசிமக பிரமோற்சவ விழாவையொட்டி கங்கைகொண்ட சோழபுரத்தில் தேரோட்டம்

ஜெயங்கொண்டம், பிப்.26: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி காலை கொடி ஏற்றப்பட்டு பிரகன்நாயகி பிரகதீஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மாவு, திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், பால் தயிர் உள்ளிட்ட 21வகையான அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. தினமும் சுவாமிகளுக்கு அபிஷேகங்களும், வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலை திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. தேரை கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர், இன்று தீர்த்தவாரியும் மாலை கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டுக்குழுவினர், இந்து சமய அறநிலையத் துறையினர், அன்னாபிஷேக விழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Related Stories: