திரளான பக்தர்கள் தரிசனம் மீனாம்படியில் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தர்ணா போராட்டம்

ஜெயங்கொண்டம், பிப்.26: மாமன்னன் ராஜேந்திரசோழனுக்கு சிலை அமைக்க கோரியும், ஜெயங்கொண்டம் செந்துறை சாலையில் அமைந்துள்ள மீனாம்படி சுடுக்காட்டை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். புதுச்சாவடியில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் புதுச்சாவடி பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் குணா, நகரத் தலைவர் மணிகண்டன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் மனோ மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>