காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.26: கால முறை ஊதியம் வழங்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காலமுறை ஊதியம் பெறு வது, சிபிஎஸ் ஒழித்து, பழைய ஓய்வூதியம் பெறுவது, பதவி உயர்வு பத்தாண்டு என்பதை ஆறு ஆண் டு எனபெறுவது, அலுவலக உதவியாளர் 10சதவீதம், கிராம நிர்வாக அலுவலர் 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக பெறுவது என் ற 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்ப லூர் ஆர்டிஓ அலுவலகம் முன் பெரம்பலூர் மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிச்சை, மாவட்டப் பொருளாளர் பாலச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களை சேர்ந்த தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் பலரும் கலந்து கொண்டு 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories:

>