போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் பெரம்பலூரில் குறைந்த அளவில் பஸ் இயக்கம்

பெரம்பலூர்,பிப்.26:14 வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய உயர்வு மற்றும் தற்காலிக பணியாளர் களுக்கு நிரந்தர பணி உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, கடந்த மாதம், போக்குவரத்துத் து றை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற் சங்கத்தினர் பேச்சுவார்த் தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப் 25ம்தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன. இதனையடு த்து திட்டமிட்டபடி அரசுப் போக்கு வரத்து கழகங்க ளில் செயல்படும் தொமுச., சிஐடியூ, எச்எம்எஸ், டிடிஎஸ் எப், எம்எல்எப், ஏஏஎல்எல் எப், டி.டபிள்யூ.யு ஆகிய தொழிற்சங்கங்கள் நேற்று அதிகாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

பெரம்பலூர் துறைமங்கல த்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து டெப்போவிலிருந்து இயக் கப்பட்ட 4 ஸ்பேர் பஸ்கள் உள்பட மொத்தமுள்ள 97 பஸ்களில் நேற்று(25ம்தே தி) காலை 10 மணிவரை யில் அண்ணா தொழிற்ச ங்க நிவாகிகளைக் கொ ண்டு 10பஸ்கள் மட்டுமே இயக்கப் பட்டது. பின்னர் மாலை முதல் நிர்வாகம் சார்பாக சில டிரைவர், கண் டக்டர்களைவைத்து 17பஸ் கள் என மொத்தத்தில் 27 பஸ்கள் இயங்கப்பட்டது. மொத்தமுள்ள 584பேர்க ளில் 550 பேர் வேலைநிறு த்தத்தில் ஈடுபட்டதால் பெர ம்பலூர் புதுபஸ்டாண்டு, ப ழைய பஸ்டாண்டு ஆகிய இரண் டுமே வழக்கமான பரபரப்பின்றி வெறிச்சோ டிக் காணப்பட்டன.  தனியார் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டது. இருப்பி னும் பல்வேறு பகுதிகளுக் கு அரசுபஸ்கள் இயக்கப்ப டாததால் பயணிகள் பெரி தும் பாதிக்கப்பட்டனர்.

Related Stories:

>