பயணிகள் தவிப்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் 9வது நாளாக வெறிச் பணிகள் பாதிப்பு

பெரம்பலூர்,பிப்.26: அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரை அனைத்து வருவாய் மற் றும் பேரிடர்மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனிஊதியம் வழங்க வே ண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் புதிதாக நியம னம் செய்யப்பட்ட அலுவ லர்களுக்கு, மாவட்ட தலை நகரங்களில் அடிப்படைப் பயிற்சி மற்றும் நில அள வை பயிற்சி வழங்கப்பட வேண்டும்.ஜாக்டோஜியோ பாதிப்புகளை உடனே சரி செய்ய வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து அ னைவருக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டும். நிறுத் தம் செய்யப்பட்ட அகவி லைப்படி மற்றும் சரண்டர் விடுப்புகள் உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி பெரம்ப லூர் மாவட்டத்தில் தமிழ் நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தினர் கடந்த 17ம்தேதி முதல் காலவரை யற்ற தொடர் வேலைநிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். 9வ து நாளான நேற்று பெரம் பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலகங் களில் பணிபுரியும் பதிவறை எழுத்தர்முதல் தாசில்தார் வரையிலான மொத் தமுள்ள 134பேர்களில், 103 பேர் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக பெரம்ப லூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் வெறிச் சோடிக் காணப்பட்டன.

Related Stories:

>