10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, பிப். 26: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்கின்றனர். நேற்று பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட தற்காலிக கலெக்டர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்ட நிலையில் அந்த அலுவலகத்தின் முன் வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் தலைமையில் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை: நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று 9வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் சிவக்குமார், வட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட இணைச்செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

Related Stories: