கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

சீர்காழி, பிப். 26: சீர்காழி அருகே பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பச்சைபெருமாநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த விவசாயி ஜெயபால். இவரது மனைவி ரேணுகாதேவி (35). நேற்று முன்தினம் இரவு மனைவி, மகனுடன் பைக்கில் வடகால் பகுதியி–்ல் உள்ள உறவினர் வீட்டுக்கு ஜெயபால் சென்றார். வடகால் முருகன் கோயில் அருகே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், ரேணுகாதேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் எடை கொண்ட 2 தங்க செயின்களை பறித்து விட்டு தப்பினர். இதுகுறித்து சீர்காழி போலீசில் ஜெயபால் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>