காரைக்காலுக்கு 28ம் தேதி அமித்ஷா வருகை

காரைக்கால், பிப். 26: காரைக்காலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும்28ம் தேதி வருகிறார். அன்றைய தினம் காரைக்கால் சந்தை திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமித்ஷா பேசுகிறார். இதையொட்டி சந்தை திடலில் பந்தல் அமைப்பதற்கான பணி நேற்று முன்தினம் துவங்கியது. பாஜக புதுச்சேரி மாநில துணைத்தலைவரும், காரைக்கால் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கணபதி தலைமையில் பாஜகவினர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பாஜக காரைக்கால் மாவட்ட பொருப்பாளர் கணபதி கூறுகையில், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற்று ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

Related Stories:

>