உதவித்தொகை உயர்த்தி கேட்டு

மயிலாடுதுறை, பிப். 26: உதவித்தொகையை உயர்த்தி கேட்டு மயிலாடுதுறையில் நேற்று 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 60 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். உதவித்தொகையை உயர்த்தி வழங்கக வேண்டும். தனியார் துறையில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மயிலாடுறை கிட்டப்பா அங்காடி முன் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 60 பேரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து மூன்றாம் நாளாக மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நேற்று ஈடுபட்டனர்.

Related Stories: