60 பேர் கைது விபத்து நடக்கும் முன் சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்

மயிலாடுதுறை, பிப்.26: மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுகா சேத்தூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளதால், கடந்த 5 வருடங்களுக்கு முன் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வகுப்புகள், புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே வகுப்பறைகள் இயங்கிவந்த பழைய கட்டிடங்களை இடிக்காமல் அப்படியே உள்ளது. அக்கட்டிடத்தில் சுமார் 20 அடி உயரத்தில் செங்குத்தாக இரண்டு சுவர்களும் தனித்தனியாக நிற்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயநிலை உள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் புதர் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டிடத்திற்கு அருகே குடியிருப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>