குறைந்த அளவில் பேருந்து இயக்கம் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான தற்காலிக கலெக்டர் அலுவலகம் திறப்பு

மயிலாடுதுறை, பிப். 26: மயிலாடுதுறை புதிய மாவட்டத்துக்கான தற்காலிக கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பணிகளை கலெக்டர் லலிதா துவக்கினார். நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தமிழகத்தின் 38வது மாவட்டமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு மார்ச் மாதம் அறிவித்தார். இதையடுத்து புதிய மாவட்டம் செயல்பட தொடங்கி மாவட்ட முகாம் அலுவலகமான மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் பணிகளை கலெக்டர் லலிதா மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் தெற்குவீதியில் இருந்த வணிக வரித்துறை அலுவலகத்துக்கு கலெக்டர் அலுவலகத்தை மாற்ற முடிவெடுத்து ரூ.5 கோடியில் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிந்த நிலையில் தற்காலிக கலெக்டர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. கட்டிடத்தை கலெக்டர் லலிதா திறந்து வைத்தார்.

Related Stories:

>