5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

நாகை, பிப். 26: கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை ஆர்டிஓ அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று 2வது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ஹமீதுபாட்சா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் மோகன், வட்ட பொறுப்பாளர் செல்லமுத்து, வட்ட துணைத்தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ.7,000 வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். பதவி உயர்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதிய குறைபாடுகளை களைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Related Stories:

>