குறைகளை மக்கள் தெரிவிக்க செல்போன் எண் அறிவிப்பு

கலெக்டர் லலிதா பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கான கலெக்டர் அலுவலகம் இனி மாயூரநாதர் தெற்குவீதியில் இயங்கும். பொதுமக்கள் மனுக்கள் என்னிடம் கொடுக்கலாம். மேலும் என்னிடம் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் 9443300955 என்ற செல்போன் நம்பரிலும் தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். அனைத்து துறைகளும் பிரிக்கப்பட்டு அதிகாரிகள் விரைவில் நியமிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

புதிய கட்டிடத்தில் கலெக்டர் லலிதாவை சந்தித்து எஸ்பி நாதா, கூடுதல் கலெக்டர் பிரசாந்த், டிஆர்ஓ முருகதாஸ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் வாழ்த்து கூறினர்.

Related Stories:

>