கரூர் மாவட்டத்தில் வழக்கம்போல பஸ்கள் இயக்கம்

கரூர், பிப். 26: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்து நடத்தி வரும் நிலையில், கரூர் மாவட்டத்தில் மட்டும் வழக்கம்போல அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வியை அடுத்து நேற்று முதல் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில்தான் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், கரூர் மாவட்டத்தில் வழக்கம் போல அனைத்து பஸ்களும் நேற்று இயக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் உள்ள 5 பணிமனைகளில் இருந்து தினமும் 258 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஸ்ரைக்கின் முதல் நாளான நேற்று 256 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>