கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் பக்தர்கள் தரிசனம் நாளை தேரோட்டம்

கரூர், பிப்.26: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமகத் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகதேரோட்ட நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான நிகழ்ச்சி கடந்த 17ம்தேதி வெள்ளி கருட வாகனத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 19ம்தேதி காலை 9 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, மற்றொரு முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான, திருத்தேர் நாளையும் (27ம்தேதி), மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத்தேரோட்டம் மார்ச் 1ம்தேதியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>