ஏரலில் ஜெயலலிதா பிறந்நதாள் விழா சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்பு

ஏரல், பிப். 26:  ஏரலில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ கேக் வெட்டி கொண்டாடினார். ஏரல் நகர அதிமுக சார்பில் காந்தி சிலை அருகில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்து ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். ஏரல் நகர செயலாளர் ஆத்திப்பழம், வை. ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் அசோக்குமார், ராஜா, ஜெ.பேரவை துணைத்தலைவர் ரத்தினசபாபதி, நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெகன்ராஜ் மற்றும் பாலமகராஜன், ஜெயம் ஷெரிப், தினேஷ், முத்துராஜ், அய்யாப்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர். பண்டாரவிளை, பண்ணைவிளையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு பெருங்குளம் கூட்டுறவு வங்கி தலைவர் ஆஷா சண்முகநாதன் தலைமை வகித்து இனிப்பு வழங்கினார். பெருங்குளம் நகர செயலாளர் வேதமாணிக்கம், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் திருத்துவசிங், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எப்றாயீம், ஜெபராஜ், மாணிக்கம், எமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>