தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சலூன் கடைகளை அடைத்து போராட்டம்

தூத்துக்குடி, பிப்.26: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (26ம் தேதி) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்ட சவரத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் முத்தரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் அறிவிப்பின்படி மருத்துவர் சமூக மக்களுக்கு 5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவர் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டபாதுகாப்பு வழங்க வேண்டும்.

சுதந்திர போராட்டத் தியாகி விஸ்வநாததாசுக்கு சென்னை மாதவரத்தில் சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (26ம் தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து சலுன் கடைகளையும் அடைத்து ஒரு நாள் அடையாள போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>