×

தருவைகுளம் அருகே லாரி மோதி சிறுவன் பலி

குளத்தூர், பிப்.26:  தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி மோதி சிறுவன்  பலியானான். தூத்துக்குடி தாளமுத்து நகர் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த செட்டிபெருமாள் மகன் மணியரசன்(25). இவரது சகோதரர் ஆறுமுகம்(15). இருவரும் தருவைகுளத்தில் மீன்பிடித் தொழில் வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை வேலைக்கு பைக்கில் சென்றனர். தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக் நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.

 அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி சிறுவன் ஆறுமுகம் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான். மணியரசன் பலத்த காயம் அடைந்தார். தகவலறிந்து அங்குவந்த தருவைகுளம் போலீசார், ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து எஸ்ஐ சரவணன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Tags : Daruvaikulam ,
× RELATED தருவைகுளம் கடல் பகுதியில் மீன்பாடு மந்தம்