தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 494 துணை வாக்குசாவடிகள்

தூத்துக்குடி,பிப்.26: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 494 துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ், தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 53 வாக்குசாவடிகளும், தூத்துக்குடி தொகுதியில்123 வாக்குசாவடிகளும், திருச்செந்தூர் தொகுதியில் 77 வாக்குசாவடிகளும், வைகுண்டம் தொகுதியில் 56 வாக்குசாவடிகளும், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 92 வாக்குசாவடிகளும், கோவில்பட்டி தொகுதியில் 93 வாக்குசாவடிகளும் என மொத்தம் 494 வாக்குசாவடிகள், துணை வாக்குசாவடிகள் புதிதாக அமைக்கப்படுகிறது.

மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள 1603 முதன்மை வாக்குச்சாவடிகளுடன், புதிதாக அமைக்கப்பட உள்ள 494 துணை வாக்குசாவடிகளும் சேர்த்து மொத்தம் 2097 வாக்குசாவடிகள். துணை வாக்குசாவடிகள் 494 அமைக்கப்படும்போது 23 வாக்குசாவடிகள் இடமாற்றமும், 26 வாக்குசாவடிகள் கட்டிட மாற்றமும், 7 வாக்குசாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைக்கப்பட உள்ள 494 துணை வாக்குசாவடிகளில் 476 ஏற்கனவே உள்ள முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள அதேபள்ளி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. 18 துணை வாக்குசாவடிகள் முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள வளாகத்தில் போதுமான இடவசதி இல்லாததால் மாற்று இடத்தில் அமைக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் தாங்கள் தெரிவித்துள்ளவாறு மாற்றங்கள் செய்யப்பட்டு இன்னும் 2 தினங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்குசாவடிகள் அமைக்கப்படும் விவரங்கள் தெரிவிக்கப்படும். இதுகுறித்து தங்களது ஆலோசனை, ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதில் தூத்துக்குடி சப் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், மாநகராட்சி ஆணையர் சரண்யாஅரி, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான்,

ஆர்டிஓக்கள் கோவில்பட்டி சங்கரநாராயணன்,  திருச்செந்தூர் தனப்ரியா, அரசியல் கட்சி பிரமுகர்கள் திமுக கீதாஜீவன்

எம்எல்ஏ, அதிமுக சந்தானம், மார்க்சிஸ்ட் எம்.எஸ்.முத்து, பிஎஸ்பி அசோக்குமார், காங்கிரஸ் பாலசிங், தேமுதிக ராமகிருஷ்ணன், மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்கள், துணை வாக்குப்பதிவு அலுவலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>