அனைத்து தகவல்களையும் எமிஸ் மூலம் எடுக்க அரசு முடிவு மாணவர்கள் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்க உத்தரவு

நெல்லை, பிப். 26: பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘எமிஸ்’ இணையதளத்தில் இருந்தே நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் மாணவர்களின் விவரங்களை புதுப்பித்து பதிவு செய்யவேண்டும் என முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு: கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் தொடர்பான விவரங்கள் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்ெவாரு பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி தொடர்பான விவரங்களை இணையதளத்தில் காலமுறை தோறும் புதுப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர், ஆசிரியர்களால் சரியாக புதுப்பிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வட்டார வள மைய கல்வி அலுவலர்கள் இணைந்து பள்ளிகளின் தலைமையாசிரியர், ஆசிரியர்களால் புதுப்பிக்கப்படும் விவரங்கள் நடைமுறையில் உள்ள தகவல்கள், விவரங்களுடன் சரியாக இருக்கிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். தவறான தகவல் உள்ளீடு ெசய்யப்பட்டு இருந்தால் அவற்றை நீக்கி சரியான தகவல்கள் இடம் பெறச் செய்ய வேண்டும்.

 விடுபட்ட, பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் விவரங்களை பதுப்பிக்க வேண்டும். இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கையாகும் மாணவர்கள் விவரம், அரசின் நலத்திட்டங்கள் தேவைப்படும் பட்டியல் பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற அனைத்து விவரங்களும் ‘எமிஸ்’ இணையதளத்தில் இருந்தே நேரடியாக எடுத்துக் கொள்ளப்பட்டு விவரங்கள் உயர் அலுவலர்களால் வரும் நாட்களில் கையாளப்பட உள்ளது. எனவே முறையாக புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>