வருவாய்த்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேச்சேரி, பிப்.26: நங்கவள்ளி அருகே உள்ள பூமிரெட்டிபட்டி அருந்ததியர் காலனியில் 18க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டுமனை பட்டா வழங்கவேண்டுமென முதலமைச்சர், கலெக்டர், தாசில்தார் என அனைவரிடமும் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவர்களுக்கு இடங்களை தேர்வு செய்தனர். அதன்பிறகும் அதிகாரிகள் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், நங்கவள்ளி பஸ்நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் வருவாய்துறை அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>