×

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

காடையாம்பட்டி, பிப்.26: காடையாம்பட்டி, வேளாண்மை துறை சார்பில், விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். காடையாம்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, உள் மாநில அளவிலான பயிற்சிக்கு கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் காடையாம்பட்டி வேளாண் அலுவலகத்தில் இருந்து உதவி இயக்குனர் நாகராஜ் வழியனுப்பும் போது ஒரு பருவ நாற்று மூலம் கரும்பு நடவு தொழில்நுட்பங்களில் கரும்பு நடவு, மண் அணைத்தல், சோகை உரித்தல், சொட்டுநீர், உரப்பாசனம் ஒருங்கிணைந்த உரம் பூச்சி மற்றும் நோய்கள் நிர்வாகம் அறுவடை பின் செய்நேர்த்தி குறித்த பயிற்சி பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜெல்லி மிட்டாய் மற்றும் ஊறுகாய் தயாரித்தல், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது குறித்து பயிற்சி பெற உள்ளதாகவும் கூறினார். இந்த விவசாயிகள் தோட்டக்கலைப் பயிர்களில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், உதவி தொழில்நுட்ப மேலாளர் துரை அரசு மற்றும் சிவசக்தி ஆகியோர் உடன் சென்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்