ஆத்தூர் மாவட்ட கல்வி அதிகாரி பொறுப்பேற்பு

ஆத்தூர், பிப்.26:ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆத்தூர் கல்வி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி மாவட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரியாக இதுவரை பொறுப்பு அலுவலர்கள் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், பூலாவரி அரசு பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வந்த கணேசன் பதவி உயர்வு பெற்று ஆத்தூர் மாவட்ட கல்வி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் நேற்று ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

>