19,632 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி

சேலம், பிப்.26: சேலம் மாவட்டத்தில் 19,632 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சேலத்தில் சுகாதார பணியாளர்கள், போலீசார், வருவாய்துறை மற்றும் உள்ளாட்சி துறையை சேர்ந்தவர்கள் என 40,521 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை19,632  பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில்  4,456 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் சுகாதார மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 14,623 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 5,009 பேருக்கும் கொரோனா   தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதுவரை 4,456 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories:

>