₹30 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை

ஓமலூர், பிப்.26: ஓமலூர் ஒன்றியத்தில், கோட்டைமாரியம்மன் கோவில் கிராமம், கலர்காட்டில் இருந்து வேலகவுண்டன்புதூர் வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு மண் சாலை உள்ளது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய தார் சாலை அமைக்க ₹30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜையில் ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பணியை துவக்கி வைத்தனர். சாலையை தரமாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Related Stories:

>