மாஜி.பஞ் தலைவர் மீது போலீசில் பெண் புகார்

தாரமங்கலம், பிப்.26: தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் இந்திராணி (45). இவரது கணவர் அசோகன் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தற்போது பாப்பம்பாடியில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவருக்கும், சின்னப்பம்பட்டி மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் (43) என்பவருக்கும் இடையே, கடந்த 20 ஆண்டாக பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், தாரமங்கலம் போலீசில் புகார் அளித்த இந்திராணி,கடந்த ஓராண்டாக தன்னுடன் தொடர்பை நிறுத்தி கொண்ட கண்ணன், இரவு நேரத்தில் தகராறு செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார். அதே போல், கண்ணன் அளித்த புகாரில், இந்திராணி தன்னை வீட்டிற்கு அடிக்கடி வரச்சொல்லி மிரட்டுவதாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பு புகார்கள் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>