×

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்

இடைப்பாடி, பிப்.26: இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் 200க்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி பூக்கள், அறுவடைக்கு தயார் நிலையில் பூத்து குலுங்குகிறது.இடைப்பாடி அருகே கொங்கணாபுரம், ரெட்டிப்பட்டி, கோணசமுத்திரம், புதுப்பாளையம், பூலாம்பட்டி, பக்கநாடு, தேவூர், செட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், சோளம், கரும்பு, மரவள்ளி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக சூரியகாந்தி சாகுபடி பிரதானமாக உள்ளது.

நீர்வளம் நிறைந்த காவிரி கரையோரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் சூரியகாந்தி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு முன் சாகுபடி செய்யப்பட்ட சூரியகாந்தி பூக்கள், தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பூலாம்பட்டி காவிரி கரையோரம் மற்றும் கொங்கணாபுரம் வழியாக ரெட்டிப்பட்டிக்கு செல்லும் சாலையோரம், விளை நிலங்களில் பூத்து குலுங்கும் சூரிய காந்தி பூக்கள், அவ்வழியாக செல்லும் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதனை அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

Tags :
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு