×

அக்னி வெயில் தொடங்கியது கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

கந்தர்வகோட்டை,மே4: கந்தர்வகோட்டை பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள பேருந்துநிலையத்திற்கு தினந்தோறும் சுற்றுபுற கிராமங்களில் ஆயிரகணக்கில் பொதுமக்களும் பள்ளி, கல்லூரியில் பயில்பவர்களும் வந்து செல்லுகிறார்கள்.

தற்சமயம் கொடை வெயில் கொழுத்தி எடுக்கும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதாலும் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியிலும் மக்கள் பெரும் அளவில் கூடும் மருத்துவமனை, வெள்ளை முனிஸ்வரர் ஆலயம் கார்னர், தஞ்சை சாலையில் உள்ள காவல் நிலைய பேருந்து நிறுத்தம் பகுதியில் மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய ஆணையர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

மேலும் கோடை வெயில் முடியும்வரை அனைத்து வாகன ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு உப்பு – சக்கரை கரைசல் நீர் (ஒ.ஆர்.எஸ்) கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். கந்தர்வகோட்டை பகுதியில் வெப்ப காற்று அதிகமாக இருப்பதாக பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் கூறுகிறார்கள்.

 

Tags : Kandarvakottai ,Pudukkottai district ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்