பொன்னமராவதி,மே4: பொன்னமராவதி பகுதியில் அனைத்து செல்போன் சேவைகளும் சிக்னல் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்போன் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இப்பகுதியில் அனைத்து செல்போன் சேவைகளுக்கான சிக்னல் சரி வர கிடைப்பதில்லை. இதனால் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளமுடியாத நிலை ஏற்படுகின்றது. இதில் ஒரு சில பகுதிகளுக்கு முழுமையான அளவில் சிக்னல் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பொன்னமராவதி பகுதியில் அனைத்து சேல்போனுக்கு சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனஇப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
