அறந்தாங்கி, மே 4: நாகுடியில் தேசிய மயமாக்கப்பட்ட புதிய வங்கி கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாக நாகுடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி களகுடி, மாணவநல்லூர், மைவயல், பிராமனவயல், காராவயல், புறங்காடு, தேடாக்கி, கொக்குமடை, இடையாத்தூர், ஏகணிவயல், கண்டிச்சங்காடு, ஏகபெருமகளூர், வெள்ளாட்டு மங்களம், கூம்பள்ளம், கம்பர்கோவில், திருநெல்லிவயல், தினையாகுடி, நிலையூர் வேட்டனூர் உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு மேல் நாகுடியில் சுற்றி உள்ளது.
இந்நிலையில் நாகுடி கடை வீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று மட்டுமே உள்ளது. இந்த வங்கியில் நாகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் வணிகர்கள் அனைவரும் கணக்கு வைத்து இருப்பதால். இந்த வங்கியில் எந்த நேரமும் கூட்டமாக உள்ளது. சின்ன விஷயமாக வங்கி சென்றாலும் 2 மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. அதனால் பொதுமக்கள் விவசாயிகள் அதிக அறவில் சிரமம் அடைகின்றனர். இதனால் நாகுடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கூடுதலாக புதிதாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
