×

லாரி தொழிலுக்கு விரைவில் நல்ல காலம் பிறக்கும்

நாமக்கல், பிப். 26: நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று, கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், லாரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வாங்கிலி, லாரித்தொழிலில் தற்போது உள்ள பிரச்னைகள் குறித்து பேசினார். பின்னர், அவர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஈஸ்வரனிடம் வழங்கினார். தொடர்ந்து ஈஸ்வரன் பேசியதாவது:

லாரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு உள்ள அனைத்து பொறுப்புகளும், அந்த தொழிலை பாதுகாக்க வேண்டிய கடமையும், கொமதேகவுக்கும், எனக்கும் இருக்கிறது. லாரி தொழிலில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். இந்த தொகுதியில் கொமதேக சார்பில் போட்டியிட்டு, சின்ராஜை எம்பியாக்கி உள்ளோம். அவரை லாரி உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். லாரி தொழிலில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, அவர் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார். லாரி தொழிலுக்கு விரைவில் நல்லகாலம் பிறக்கும்.

இந்த தொழிலின் வளர்ச்சிக்கு, மாநில அரசு என்ன வெல்லாம் செய்து கொடுக்க முடியுமோ, அதை நிறைவேற்றும் இடத்துக்கு நாம் விரைவில் வருவோம். இவ்வாறு ஈஸ்வரன் பேசினார். கூட்டத்தில் சங்க உதவித்தலைவர் மணி (எ) சுப்புரத்தினம், செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், இணைச் செயலாளர் சரவணன், சங்க செயற்குழு உறுப்பினர்கள், லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்