பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.26: கிருஷ்ணகிரியில் அனைத்து டாஸ்மாக் கூட்டுக்குழு சங்கம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கிருஷ்ணகிரி பையனப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் எதிரில், அனைத்து டாஸ்மாக் கூட்டுக்குழு சங்கம் சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தொமுச நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டுக்குழு நிர்வாகிகள் சக்திவேல், சஞ்சீவன், மனோகரன், மணி, நெடுங்கிள்ளி, குமரேசன், கணேசன், மாதப்பன் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேரம் வேலை வழங்க வேண்டும். இஎஸ்ஐ, மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>