ஏணியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி

சாவுதேன்கனிக்கோட்டை, பிப்.26:  தேன்கனிக்கோட்டை அருகே மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்(58). இவர், அதே ஊரில் உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, பண்ணையில்  கோழிகளுக்கு தீவனம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காற்று வராமல் இருக்க உயரமான இடத்தில் ஏணி போட்டு, படுதா கட்டி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் திடீரென கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>