சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி லாரி கவிழ்ந்தது

சூளகிரி, பிப்.26: சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சூளகிரி அருகே சப்படி பகுதியில் இருந்து, பெங்களூருவுக்கு நேற்று மாலை ஜல்லி எற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று புறப்பட்டது. கோபசந்திரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது, திடீரென தறிகெட்டு ஓடிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் கொட்டியது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தால் அந்த வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர்.

Related Stories:

>