அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து போராட்டம்

தர்மபுரி, பிப்.26 : தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியராக்க வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் 4வது நாளாக நேற்று கும்மியடித்து பாடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகே 4வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் கும்மியடித்து சமூக பாடல்கள் பாடி போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லில்லிபுஷ்பம், பொருளாளர் ஈஸ்வரி, மாவட்ட நிர்வாகிகள் தெய்வானை, முருகம்மாள், ராஜம்மாள், சுமதி, தெய்வானை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>