பட்ஜெட் தொடரில் ஓய்வூதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்

தர்மபுரி, பிப்.26: தர்மபுரி மாவட்ட தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில், விவசாய தொழிலாளர் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 60 வயது அடைந்த இரு பாலருக்கும், இதுவரை  ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நடப்பாண்டு தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையிலும், உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை வைத்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, 60 வயது கடந்த இருபாலருக்கும் மாதம் ₹3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க, சட்டமன்ற கூட்ட தொடரில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>