×

திருச்சி ஏர்போர்ட்டில் 3 கிலோ தங்கம் பறிமுதல் : 20 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மாலை வந்த சிங்கப்பூர் விமானத்தில் பயணித்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கடும் சோதனை செய்தனர். இதில் பல பயணிகள் இதுபோன்று தங்கத்தை நகையாக, பேஸ்ட் வடிவில் கொண்டுவந்தது தெரிந்தது.

இதுதொடர்பாக விமானத்தில் வந்த 20 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அவர்கள் 3 கிலோ வரை தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே விமானத்தில் 20 பயணிகள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Trichy airport ,Trichy ,Singapore ,Trichy International Airport ,
× RELATED இறக்குமதி பருத்திக்கு வரி விதிப்பு...